வவுனியா, தரணிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள குறிசுட்டகுளம் ஏரியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் மேலும் குறித்த சடலம் 20-25 வயதுடையது பெண் ஒருவரினுடையது எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் கை, கால்கள் இல்லாது இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ள்ளது.
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
இந்த மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.