ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோர் நேற்று(14.11) பாரளுமன்று பொது நிறுவன குழுவுக்கு(கோப்) முன்னர் ஆஜரானார்கள்.
இதன் போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் தனது நடவடிக்கைகளில் நலிவடைந்து காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாடே அணியின் மோசமான பெறுதிகளுக்கு காரணம் எனவும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரா சுட்டிக்காட்டப்பட்டது.
முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும், கோப் குழு உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர அணித்தெரிவு தொடர்பிலும் அணி வீரர்களது உபாதை முகாமைத்துவம் தொடர்பிலும், உபாதைகள் தொடர்பில் முகாமைத்துவம் செய்யும் வைத்தியர் தொடர்பிலும் அதிருப்தியான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
குறித்த வைத்தியர் “One Shot” என அழைக்கப்படுவதாகவும், அவர் விளையாட்டு சிறப்பு வைத்தியர் அல்ல எனவும், அவர் ஊசி மூலம் ஏற்றிய மருந்துகளினாலேயே வீரர்களுக்கு கால் உபாதை ஏற்படுகிறது என்ற குற்றச்ச்சாட்டையும் முன் வைத்துள்ளார். தமது மருத்துவக் குழுவில் வேறு வேறு சிறப்பு நிபுணர்கள் உள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதிலளித்ததுளளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக்கிண்ண தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் அமைச்சரின் அனுமதியின்று அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் சென்றுள்ளதாகவும், அவ்வாறு செல்ல முடியாது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள அதேவேளை விளையாட்டு அமைச்சின் அப்போதைய செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த பயணத்தின் போது, ஷம்மி சில்வா தனது உறவினர்கள் தவிர்ந்த வேறு சிலரையும் அழைத்து சென்றதாக ஒத்துக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டதாகவும், அவர் கொடுப்பனவை மறுத்ததாகவும் ஷம்மி சில்வா கோப் குழுவுக்கு தெரிவித்துளளார். அவர் கொடுப்பனவை பெற்றதன் பின்னர் மறுத்துள்ளார் என தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கே கேள்வியெழிப்பியிருந்தார்.
நவம்பர் 24 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கோப் குழுவுவில் முன்னிலையாக வேண்டுமென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் மகேசனும் முன்னிலையாகியிருந்தார்.