இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
கடந்த வருடம் அரை இறுதிப் போட்டியில் மோதிய அதே இரு அணிகள் இம்முறையும் அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. கடந்த முறை நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இந்தியா அணி கடந்த முறையிலும் பார்க்க இம்முறை பலமாக களமிறங்கியுள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெறுவது மேலதிக பலம். நியூசிலாந்து அணி பலமாக ஆரம்பித்த போதும் இறுதியில் தடுமாறியே அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டது. இந்தியா இந்த வருட தொடரில் 9 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு உலக சாம்பியனாக இந்தியா அணி தெரிவான பின்னர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இம்முறை இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன்((தலைவர்), டிரென்ட் போல்ட், மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், மட் ஹென்றி, ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர்