கோலியின் சாதனைகளோடு இந்தியா அதிரடி.

கோலியின் சாதனைகளோடு இந்தியா அதிரடி.

இந்தியா அணிக்கும், நியூசிலாந்து அணிக்குமிடையிலான உலகக்கிண்ண தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி இந்தியா, மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்டி 50 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்திப்பிடிப்பது நியூசிலாந்து அணிக்கு இலகுவானதல்ல. கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும். இந்தியா அணியின் சகல துடுப்பாட்ட வீரர்களும் ஆக்ரோஷமாக அடித்தாடி இந்த அபார ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது.

ஆரம்பத்தில் அதிரடி நிகழ்த்தி ரோஹித் ஷர்மா ஓட்டங்களை வேகமாக அதிகரித்து கொடுத்தார். அந்த ஆரம்பத்தை அவர் ஆட்டமிழந்த பின்னர் சுப்மன் கில் தொடர்ந்தார். விராத் கோலி நிதானமாக இணைப்பாட்டத்தை வழங்கினார். 22.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை பெற்ற நிலையில் சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். முதல் விக்கெட் இணைப்பட்டாம் 71 ஓட்டங்கள். இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம் 93 ஓட்டங்கள். சுப்மன் கில் இறுதி ஓவரில் மீண்டும் ஆடுகளத்துக்கு வருகை தந்து ஒரு பந்தினை எதிர்கொண்டார்.

கில் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவை தரும் என்று எதிர்பார்த்த போதும், ஷ்ரேயாஸ் ஐயர், கோலி இணைப்பாட்டம் மேலும் சிறப்பாக சென்றது. இருவரும் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்தனர். கோலி 117 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 163 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்டது.

விராத் கோலி 80 ஓட்டங்களை பெற்ற வேளையில் உலகக்கிண்ண தொடர் ஒன்றில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவர் என்ற சச்சின் ரெண்டுல்காரின் சாதனையை தாண்டினார். தற்போது ஒரு உலகக்கிண்ண தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவர் விராத் கோலி. விராத் கோலி ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 50 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கு முன்னர் சச்சின் கூடுதலாக 49 சதங்களை பூர்த்தி செய்திருந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆரம்பித்து மிக அதிரடியாக அடித்தாடி ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். கடந்த போட்டியிலும் சதத்தை பெற்றிருந்தார்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோஹித் ஷர்மாபிடி – கேன் வில்லியம்சன்டிம் சௌதி472944
சுப்மன் கில்  806683
விராத் கோலிபிடி- டெவோன் கொன்வேடிம் சௌதி11711392
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி- டெரில் மிட்செல்டிரென்ட் போல்ட்1057048
லோகேஷ் ராகுல்L.B.Wமிட்செல் சென்ட்னர்273530
சூர்யகுமார் யாதவ்பிடி- கிளென் பிலிப்ஸ்டிம் சௌதி010200
   
   
       
       
       
உதிரிகள்  08   
ஓவர்  50விக்கெட்  04மொத்தம்397   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டிரென்ட் போல்ட்10008601
டிம் சௌதி100010003
மிட்செல் சென்ட்னர்10015100
லூக்கி பெர்குசன்08006500
ரச்சின் ரவீந்திரா07006000
கிளென் பிலிப்ஸ்05003300

கடந்த வருடம் அரை இறுதிப் போட்டியில் மோதிய அதே இரு அணிகள் இம்முறையும் அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. கடந்த முறை நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

இந்தியா அணி கடந்த முறையிலும் பார்க்க இம்முறை பலமாக களமிறங்கியுள்ளது. இந்தியாவில் போட்டி நடைபெறுவது மேலதிக பலம். நியூசிலாந்து அணி பலமாக ஆரம்பித்த போதும் இறுதியில் தடுமாறியே அரை இறுதி வாய்ப்பை பெற்றுக்கொண்டது. இந்தியா இந்த வருட தொடரில் 9 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக சாம்பியனாக இந்தியா அணி தெரிவான பின்னர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இம்முறை இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

அணி விபரம்

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன்(தலைவர்),மார்க் சப்மன், டெவோன் கொன்வே, லூக்கி பெர்குசன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், டிம் சௌதி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version