சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடுப்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் நண்பகல் 12.00மணிக்கு பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவல்களில் குறித்த விடயம் பதிவாகியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு!

மேலும், இவர்களில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த 35பேர் உறவினர் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஐந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்தோடு சீரற்ற கால நிலையினால் வட்டக்கச்சி பகுதியில் கால்வாயுடனான மதகு ஒன்றும் சேதமடைந்துள்து. குறித்த பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version