ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடந்த 06 ஆம் திகதி இடைக்கால நிர்வாகசபையினை வர்த்தமானி மூலம் அறிவித்தார். அதற்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா 07 ஆம் திகதி தாக்கல் செய்த ரீட் மனுவின் அடிப்படையில் 14 நாட்களுக்கு இடைக்கால நிர்வாக சபைக்குள் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்து.
இந்த தீர்ப்பு தொடர்பில் மீள் விசாரணைய செய்ய வேண்டுமென அமைச்சர் சார்பில் வழக்கறிஞரினால் கடந்த 13 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு எடுத்த போது மேல் முறையீட்டு நீதின்ற தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன பாரளுமன்றம் அடங்கலாக அமைச்சர்கள் பலரும் இந்த தீர்ப்பு தொடர்பில் விமர்சனம் செய்தமையினால் தான் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இவ்வாறான நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்காக நீதிபதிகள் D. N. சமரகோன் மற்றும் நீல் இதவெல்ல ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்டது. அதன் போது இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தொடர்பில் மேல் முறையீட்டு நீதின்ற தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரட்னவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் D. N. சமரகோன் மற்றும் ஷோபித ராஜகருணா ஆகியோர் வழக்கு விசாரணையின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.