தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

தென்னாபிரிக்காவை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டி தற்சமயம் இந்தியா, கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர்கள் மிற்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ஓட்டங்களையும் பெற முடியவில்லை. ஐந்தாவது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்லாசன், டேவிட் மில்லர் ஜோடி நிதானமாக போராடி அணியை மீட்டு எடுத்தனர். சத இணைப்பாட்டத்தை அண்மித்த வேளையில் க்ளாஸானின் விக்கெட்டை ட்ரவிஸ் ஹெட் கைப்பற்றி அடுத்த பந்திலும் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். 95 ஓட்ட இணைப்பாட்டமே முறியடிக்கப்பட்து.

தொடர்ந்த்தும் நிதானம் கார்த்து டேவிட் மில்லர் துடுப்பாடினார். ஜெராட் கோட்ஷே அவருக்கு பக்க பலமாக துடுப்பாடி கைகொடுத்தார். ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 53 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

டேவிட் மில்லர் மிக அபாரமான சதம் ஒன்றை பூர்த்தி செய்தார். இது அவரின் ஆறாவது சதமாகும். சதமடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர்கள் ஜோஸ் ஹெஷல்வூட், மிற்செல் ஸ்டார்க் மிக அபாரமான ஆரம்பத்தை வழங்கினார்கள். அந்த ஆரம்பமே தென்னாபிரிக்கா அணியை கட்டுப்படுத்த உதவியது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவுஸ்திரேலியா அணிக்கு இலாகுவாக தென்படுகிறது. இருப்பினும் தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சும் பலமானது. அவுஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்த வாய்ப்புகளுமுள்ளன.

அவுஸ்திரேலியா அணி ஒன்பதாவது தடவை அரை இறுதிப் போட்டியில் இன்று விளையாடுகிறது. இவற்றில் கடந்த முறை மட்டுமே அரை இறுதியோடு வெளியேறியது. ஏனைய சகல தடவைகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா அணி ஐந்தாவது தடவை அரை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இதுவரை இறுதிப் போட்டிக்குத் தெரிவானதில்லை.

அணி விபரம்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ககிஸோ ரபாடா ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, ரப்ரைஸ் ஷம்ஸி4

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி – பட் கம்மின்ஸ்ஜோஸ் ஹெஸல்வூட்031400
ரெம்பா பவுமாபிடி – ஜோஸ் இங்கிலிஸ் மிட்செல் ஸ்டார்க்000400
ரஷி வன் டேர் டுசென்பிடி – ஸ்டீவ் ஸ்மித்ஜோஸ் ஹெஸல்வூட்063100
எய்டன் மார்க்ரம்பிடி – டேவிட் வோர்னர்மிட்செல் ஸ்டார்க்102020
ஹெய்ன்ரிச் கிளாசன்Bowledட்ரவிஸ் ஹெட்474842
டேவிட் மில்லர்பிடி – ட்ரவிஸ் ஹெட்பட் கம்மின்ஸ்1011168 
மார்கோ ஜன்சன்L.B.Wட்ரவிஸ் ஹெட்000100
ஜெரால்ட் கோட்ஸிலிபிடி – ஜோஸ் இங்கிலிஸ் பட் கம்மின்ஸ்193920
கேசவ் மகராஜ்பிடி – ஸ்டீவ் ஸ்மித்மிட்செல் ஸ்டார்க்040800
ககிசோ ரபாடாபிடி – க்ளென் மக்ஸ்வெல்பட் கம்மின்ஸ்101301
ரப்ரைஸ் ஷம்ஸி  010500
உதிரிகள்  11   
ஓவர்  49.4விக்கெட்  10மொத்தம்212   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்10013503
ஜோஸ் ஹெஸல்வூட்08031202
பட் கம்மின்ஸ்9.4005103
அடம் ஷம்பா   07005500
க்ளன் மக்ஸ்வெல்10003500
ட்ரவிஸ் ஹெட்05002102
     
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version