அவுஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்

அவுஸ்திரேலியா அணி எட்டாவது முறையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டியில்

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் கொல்கொத்தா ஈடின் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 2 விக்கெட்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 213 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 47. 2 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்றது.

இந்த உலகக்கிண்ண தொடரின் அதிக விறு விறுப்பை தந்தது இந்தப் போட்டியே.

தென்னாபிரிக்கா அணி துடுப்பாடிய வேளையில் அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர்கள் மிற்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஷல்வூட் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ஓட்டங்களையும் பெற முடியவில்லை. ஐந்தாவது விக்கட்டுக்காக ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்லாசன், டேவிட் மில்லர் ஜோடி நிதானமாக போராடி அணியை மீட்டு எடுத்தனர். சத இணைப்பாட்டத்தை அண்மித்த வேளையில் க்ளாஸானின் விக்கெட்டை ட்ரவிஸ் ஹெட் கைப்பற்றி அடுத்த பந்திலும் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். 95 ஓட்ட இணைப்பாட்டமே முறியடிக்கப்பட்து.

தொடர்ந்த்தும் நிதானம் கார்த்து டேவிட் மில்லர் துடுப்பாடினார். ஜெராட் கோட்ஷே அவருக்கு பக்க பலமாக துடுப்பாடி கைகொடுத்தார். ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் 53 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

டேவிட் மில்லர் மிக அபாரமான சதம் ஒன்றை பூர்த்தி செய்தார். இது அவரின் ஆறாவது சதமாகும். சதமடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப பந்துவீச்சாளர்கள் ஜோஸ் ஹெஷல்வூட், மிற்செல் ஸ்டார்க் மிக அபாரமான ஆரம்பத்தை வழங்கினார்கள். அந்த ஆரம்பமே தென்னாபிரிக்கா அணியை கட்டுப்படுத்த உதவியது. பட் கம்மின்ஸ் இறுதி நேரத்தில் விக்கெட்களை காப்பாற்றினார்.

இந்த இலக்கு நோக்கி துடுப்பாட ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி அதிரடி ஆரம்பத்தை ஏற்படுத்தியது. அரைச்சத இணைப்பாட்டத்தை வேகமாக தாண்டிய நிலையில் டேவிட் வோர்னர் ஆட்டமிழந்தார். புதிதாக வந்த மிச்செல் மார்ஷ் வேகமாகவே ஆட்டமிழந்தார். இருப்பினும் ட்ரவிஷ் ஹெட்டின் அதிரடி தொடர்ந்தது. அரைச்சதத்தை பூர்த்தி செய்த பின்னர் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுக் கொடுத்தே ஆட்டமிழந்தார். இருப்பினும் தென்னாபிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அழுத்தம் வழங்கி மேலுமிரு விக்கெட்ளை கைப்பற்ற இரு அணிகளுக்கும் வாய்ப்பு என்ற நிலை உருவானது.

ஸ்ட்டீவ் ஸ்மித் நிதானம் கார்த்து விக்கெட் வீழ்வதனை தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அவரோடு ஜோஷ் இங்கிலிஷ் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அவுஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.ஸ்ட்டீவ் ஸ்மித் துடுப்பாடிய விதமே அவர்களுக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தது. இருப்பினும் நிதானம் கார்த்து விக்கெட்டினை காப்பாற்றி வைத்திருந்த ஸ்மித் மேற்கொண்ட பிழையான துடுப்பாட்ட பிரயோகம் அவரை வெளியேற்றியது. தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பும் உருவானது. 20 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் கோர்ட்ஷியா இங்லிஷின் விக்கெட்டினை கைப்பற்ற போட்டி மேலும் விறு விறுப்பானது.

அவுஸ்திரேலியா அணி எட்டாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஐந்து தடவைகள் சம்பியனாக மகுடம் சூடியுள்ளது. கடந்த முறை மட்டுமே அரை இறுதியோடு வெளியேறியது.

தென்னாபிரிக்கா அணி ஐந்தாவது தடவை அரை இறுதிப் போட்டியில் விளையாடிய நிலையில் மீண்டும் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரை இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா அணி தெரிவானதில்லை.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ட்ரவிஸ் ஹெட்Bowledகேசவ் மகராஜ்624892
டேவிட் வோர்னர்Bowledஎய்டன் மார்க்ரம்291814
மிற்செல் மார்ஷ்பிடி – ரஷி வன் டேர் டுசென்ககிசோ ரபாடா000600
ஸ்டீபன் ஸ்மித்பிடி – குயின்டன் டி கொக்ஜெரால்ட் கோட்ஸிலி306220
மார்னஸ் லபுஷேன்L.B.Wரப்ரைஸ் ஷம்ஸி183120
க்ளன் மக்ஸ்வெல்Bowledரப்ரைஸ் ஷம்ஸி010500
ஜோஷ் இங்லிஷ்Bowledஜெரால்ட் கோட்ஸிலி284930
மிட்செல் ஸ்டார்க்  163820
பட் கம்மின்ஸ்  142910
அடம் ஷம்பா      
ஜோஸ் ஹெஸல்வூட்      
உதிரிகள்  17   
ஓவர்  47.2விக்கெட்  07மொத்தம்215   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மார்கோ ஜனேசன்4.2003500
ககிசோ ரபாடா06004101
எய்டன் மார்க்ரம்08012301
ஜெரால்ட் கோட்ஸிலி09004702
ரப்ரைஸ் ஷம்ஸி10004202
கேசவ் மகராஜ்10002401
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்பிடி – பட் கம்மின்ஸ்ஜோஸ் ஹெஸல்வூட்031400
ரெம்பா பவுமாபிடி – ஜோஸ் இங்கிலிஸ் மிட்செல் ஸ்டார்க்000400
ரஷி வன் டேர் டுசென்பிடி – ஸ்டீவ் ஸ்மித்ஜோஸ் ஹெஸல்வூட்063100
எய்டன் மார்க்ரம்பிடி – டேவிட் வோர்னர்மிட்செல் ஸ்டார்க்102020
ஹெய்ன்ரிச் கிளாசன்Bowledட்ரவிஸ் ஹெட்474842
டேவிட் மில்லர்பிடி – ட்ரவிஸ் ஹெட்பட் கம்மின்ஸ்1011168 
மார்கோ ஜன்சன்L.B.Wட்ரவிஸ் ஹெட்000100
ஜெரால்ட் கோட்ஸிலிபிடி – ஜோஸ் இங்கிலிஸ் பட் கம்மின்ஸ்193920
கேசவ் மகராஜ்பிடி – ஸ்டீவ் ஸ்மித்மிட்செல் ஸ்டார்க்040800
ககிசோ ரபாடாபிடி – க்ளென் மக்ஸ்வெல்பட் கம்மின்ஸ்101301
ரப்ரைஸ் ஷம்ஸி  010500
உதிரிகள்  11   
ஓவர்  49.4விக்கெட்  10மொத்தம்212   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்10013503
ஜோஸ் ஹெஸல்வூட்08031202
பட் கம்மின்ஸ்9.4005103
அடம் ஷம்பா   07005500
க்ளன் மக்ஸ்வெல்10003500
ட்ரவிஸ் ஹெட்05002102
     

அணி விபரம்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா(தலைவர்), குயின்டன் டி கொக், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ககிஸோ ரபாடா ரஷி வன் டேர் டுசென், ஜெரால்ட் கோட்ஸிலி, ரப்ரைஸ் ஷம்ஸி4

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version