அரச உத்தியோகத்தர்கள் முற்றிலும் புறக்கணிப்பு

2022ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் 16 ஆயிரம் ரூபா சம்பள கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரச உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் என்பதே அரசு ஊழியர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை என்றும் அவர்கள் தொடர்பான திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை என குறித்த சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் 1.5 மில்லியன் அரச உத்தியோகத்தர்களும் அவர்களை நம்பியுள்ள 6 மில்லியன் மக்களும் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் அவசியம் என ஆன்மீக கணக்கெடுப்பின்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரச உத்தியோகத்தர்கள் முற்றிலும் புறக்கணிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version