தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.11) காலை விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்படுவார் என அந்த பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி தொடர்பில் பிரமோத்ய விக்ரமசிங்க வெளிப்படுத்திய விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர் அழைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அரங்கில் இலங்கை அணி எதிர்கொண்டுள்ள பாரிய வீழ்ச்சிக்கு பின்னணியில் சதி இருப்பதாக தேசிய கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.