மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17.11) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.