
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இந்தியா, அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இந்தியா அணியின் தலைவர் விராத் ரோஹித் ஷர்மா தாம் முதலில் துடுப்பாட விரும்பியதாக தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலியா அணி தலைவர் பட் கம்மின்ஸ் சொன்னது போன்று இந்தியாவின் ரசிர்களை அமைதி காக்க வைத்துள்ளது அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு.
இந்தியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இந்தியா அணி துடுப்பாட ஆரம்பித்த வேளையில் ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆரம்பித்தார். தடுமாறிய சுப்மன் கில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராத் கோலியும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை வேகமாக உயர்த்தினார்கள். மக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் அதிரடியாக அடித்தாடிய வேளையில் தேவையற்ற அதிக ஆக்ரோஷம் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழக்க செய்தது. அரைச்சதத வாய்ப்பை இழந்தார் ஷர்மா. அவரின் ஆட்டமிழப்பின் பின்னர் இந்தியாவின் தடுமாற்றம் ஆரம்பித்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வரத்தில் நான்கு ஓட்டத்தை பெற்ற போதும் 3 பந்துகளில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் விராத் கோலி, லோகேஷ் ராகுல் இணைந்து மிக பொறுமையாக துடுப்பாடினார்கள். 98 பந்துகள் 4 ஓட்டங்கள் இன்றி துடுப்பாடினார்கள். இருவரும் 109 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்ற வேளையில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். இது மேலும் இந்தியா அணிக்கு பின்னடைவைவாக மாறிப்போனது. இந்தியா இந்த உலகக்கிண்ண தோடரில் இந்தளவு அழுத்தத்துக்கு உள்ளானது இதுவே முதற் தடவையாக அமைந்து.
ரவீந்தர் ஜடேஜா, லோகேஷ் ராகுலுடன் இணைப்பட்டதை மேற்கொள்ள முயற்சித்த போதும் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இன்று இந்தியா அணிக்கும் எதுவுமே சாத்தியமாகவில்லை என்ற நிலை உருவானது. லோகேஷ் ராகுல் அரைச்சதத்தை பூர்த்தி செய்து நிதானமாக துடுப்பாடினார். 36 ஆவது ஓவரில் இறுதி துடுப்பாட்ட ஜோடியாக ராகுல்-சூர்யகுமார் ஆகியோர் இணைந்தனர். அடுத்தடுத்த விக்கெட்கள் இழக்கப்பட 4 ஓட்டங்களை பெற முடியாமல் போனது. 98 பந்துகளின் பின்னர் முதல் நான்கு ஓட்டத்தை பெற்று பின்னர் 76 பந்துகளில் மீண்டும் நான்கு ஓட்டம் பெறப்பட்டது. சூர்யா அந்த நான்கு ஓட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.
இந்தியா அணி சகல போட்டிகளிலும் அதிரடியாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்த வந்த அணி. இன்றே அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் தடுமாறியுள்ளது. லோகேஷ் ராகுல் 41.3 ஓவர்கள் நிறைவில் வெளியேறினார். அதிரடி நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மிக மெதுவான ஆரம்பத்தையே வழங்கினார். அத்தோடு இறுதி நேரத்தில் தான் பந்துகளை எதிர்கொள்ளாமல் பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களை எதிர்கொள்ள விட்டமை விக்கெட்கள் இழக்கப்படவும் ஓட்டங்கள் அதிகரிக்காமல் இருக்கவும் காரணமாக அமைந்தது. அதிரடியாக அடித்தாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. 10.2 ஒவ்களின் பின்னர் இந்தியா அணி 4, நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். சுழற் பந்துவீச்சாளர்கள் இறுக்கமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசினார்கள். மக்ஸ்வெல் கைப்பற்றிய ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டே இந்தியா அணியின் துடுப்பாட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய விக்கெட்.
அவுஸ்திரேலியா அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை இலகுவாக பெற அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாகவே இந்த தொடரில் காணப்படுகிறது. அதுவே இந்தியா அணிக்கான நம்பிக்கை. அவர்கள் ஆக்ரோஷமாக பந்துவீசுவர்கள் என நம்பலாம். 280 ஓட்டங்களே முதலில் துடுப்பாடும் அணிக்கான வெற்றி இலக்காக அமையுமென கூறப்படுகிறது.
போட்டி நடைபெறும் மைதானம் முழுமையாக நீல வர்ணமாக காட்சியளிக்கிறது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ரோஹித் ஷர்மா | பிடி – ட்ரவிஸ் ஹெட் | க்ளன் மக்ஸ்வெல் | 47 | 31 | 4 | 3 |
சுப்மன் கில் | பிடி – அடம் ஷம்பா | மிட்செல் ஸ்டார்க் | 04 | 07 | 0 | 0 |
விராத் கோலி | Bowled | பட் கம்மின்ஸ் | 54 | 63 | 4 | 0 |
ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | பட் கம்மின்ஸ் | 04 | 03 | 1 | 0 |
லோகேஷ் ராகுல் | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | மிட்செல் ஸ்டார்க் | 66 | 107 | 1 | 0 |
ரவீந்தர் ஜடேஜா | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | ஜோஸ் ஹெஸல்வூட் | 09 | 22 | 0 | 0 |
சூர்யகுமார் யாதவ் | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | ஜோஸ் ஹெஸல்வூட் | 18 | 28 | 1 | 0 |
மொஹமட் ஷமி | பிடி – ஜோஷ் இங்கிலிஸ் | மிட்செல் ஸ்டார்க் | 06 | 10 | 1 | 0 |
ஜஸ்பிரிட் பும்ரா | L.B.W | அடம் ஷம்பா | 01 | 03 | 0 | 0 |
குல்தீப் யாதவ் | Run Out | 10 | 18 | 0 | 0 | |
மொஹமட் சிராஜ் | 09 | 08 | 1 | 0 | ||
உதிரிகள் | 12 | |||||
ஓவர் 50 | விக்கெட் 10 | மொத்தம் | 239 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிட்செல் ஸ்டார்க் | 10 | 00 | 55 | 03 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 10 | 00 | 60 | 02 |
க்ளன் மக்ஸ்வெல் | 06 | 00 | 35 | 01 |
பட் கம்மின்ஸ் | 10 | 00 | 32 | 02 |
அடம் ஷம்பா | 10 | 00 | 43 | 01 |
மிற்செல் மார்ஷ் | 02 | 00 | 05 | 00 |
ட்ரவிஸ் ஹெட் | 02 | 00 | 04 | 00 |
இந்தியா அணி இந்த உலகக்கிண்ண தொடரில் தோல்விகளின்றி 10 வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளது. அவர்களுக்கு இது நான்காவது இறுதிப் போட்டி. 1983 ஆம் ஆண்டு முதற் தடவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெற்றி பெற்றார்கள். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தார்கள். அதன் பின்னர் இரு அணிகளும் இறுதிப் போட்டியில் இம்முறை சந்திக்கின்றன. 2011 ஆம் ஆண்டு இந்தியா அணி இரண்டாவது தடவையாக வெற்றி பெற்றதன் பின்னர் இந்த முறை மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்புள்ள அணியாகவே இந்தியா அணி உலகக்கிண்ண தொடரில் களமிறங்கியது.
அவுஸ்திரேலியா அணி உலகக்கிண்ணம் என்று வந்தால் விஸ்வரூபம் எடுப்பார்கள். இம்முறையும் அதனை நிரூபித்துள்ளளார்கள். முதலிரு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்க அவுஸ்திரேலியாவின் ஆட்டம் இந்தமுறை அவ்வளவுதான் என்றே கூறப்பட்டது. அவர்கள் தென்னாபிரிக்கா அணியுடன் முதல் சுற்றில் தோல்வியை சந்தித்தார்கள். ஆனால் அதனை தொடர்ந்து 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துளளர்கள். ஐந்து முறை சம்பியனாக கிண்ணத்தை வென்றவர்கள். இரண்டு முறை இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டவர்கள். 1996 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்த பின்னர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நான்கு தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்துளள்னர்.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், மிற்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், க்ளென் மக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா