”இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்” – அமெரிக்க ஜனாதிபதி!

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல் முடிவுக்கு வரலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் தங்களிடம் இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளை மீட்கும் நோக்கில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இலக்குகளை இஸ்ரேல் படைகள் தாக்கி வருகின்றன.

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டால், இந்த போரை நிறைவுக்கு கொண்டு வரலாம், இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply