2022 ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடத்துநர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்குவதில் கவனம் செலுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பேருந்துகளில் கிடைக்கும் வருமானத்தில் இரண்டு ஊழியர்களை பராமரிப்பது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எரிப்பொருள் விலை அதிகரிப்புஇ உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பற்றாக்குறை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓம்னி எனப்படும் முற்கொடுப்பனவு அட்டையை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்னராக கலந்துரையாடல்களையும் முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
