தரமற்ற தடுப்பூசிகளை அரசாங்கத்திற்கு விநியோகித்தகுற்றச்சாட்டின் கீழ், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் கணக்காளர் மற்றும் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் (1) நிலையத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல சுகாதார அமைச்சுக்குச் சென்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்திய விஜித் குணசேகர உட்பட சுமார் 10 பேரின் வாக்குமூலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்டுள்ளது.