பிரதான புகையிரத பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறங்கியுள்ளதால் அப்பாதையூடான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் அப்பாதையூடாக இடம்பெறும் வழைமையான புகையிரத சேவைகள் இன்றையதினம் (15/11) இயங்காது என்றும், 10 சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை புகையிரத சேவைகள் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பாதை தடையினூடாககொழும்பு – கோட்டைக்கு 3 புகையிரதங்களும், வியாங்கொடையிலிருந்து 3 புகையிரதங்களும், கம்பஹாவிலிருந்து ஒரு புகையிரதமும், ராகமையிலிருந்து 2 புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
கம்பஹாவுக்கு மேல் ஒரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்படாத நிலையில்,மிக முக்கியமாக வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் முற்றிலுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.