வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2024) இரண்டாம் வாசிப்பு இன்று (21.11) பிற்பகல் பாராளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர கட்சி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், வடிவேல் சுரேஸ், டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.