தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவர் பேசியது தொடர்பில் பதில் தெரிவித்த த்ரிஷா, ”மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு” என்று தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, மடோனா, சின்மயி, எம்.எஸ்.பாஸ்கர், பாரதிராஜா என பலரும் தங்களது காட்டமான எதிர்ப்பை தொடர்ந்தும் பதிவு செய்துவருகின்றனர். ‘
அதேசமயம் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் இதுவரை இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காதது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.