கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய மட்டத்தில் சாதனை!

அகில இலங்கை தமிழ்மொழித்தின கர்நாடக சங்கீதப் போட்டியில் நான்கு நிகழ்வுகளில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பல்லியம் குழு, புல்லாங்குழல் தனி (சிரேஸ்ட பிரிவு), புல்லாங்குழல் தனி (கனிஸ்ட பிரிவு), குழு இசை (நம் நாட்டுப்பாடல்) ஆகிய நான்கு பிரிவுகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply