வவுனியாவில் பல குளங்கள் பெருக்கெடுக்கும் நிலையில்!

வவுனியா மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி பெருக்கெடுக்கும் நிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 639 குளங்களில் விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள 617 குளங்களில் 400 குளங்களும், சிறு நீர்ப்பாசனத்தின் கீழ் உள்ள 17 குளங்களில் 11 குளங்களும், தற்போது நிரம்பி பெருக்கெடுக்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply