விசாகப்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ‘இந்தியன்- 2’படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இன்று (23.11) முதல் சென்னையில் இதன் படப்பிடிப்பு இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
பல பிரபல நட்சத்திரங்களும் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.