இந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணி நேற்று(26.11) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அண்மைக்காலமாக தொடர்ந்து அணியில் இடமபிடித்து வரும் விக்கெட் காப்பாளர்/துடுப்பாட்ட வீரர் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார்.
இந்த அணிக்கு சினெத் ஜயவர்தன அணியின் தலைவராகவும், மல்ஷா தருபத் உப தலைவராகவும் நியமைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை டுபாயில் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தொடர் நடைபெறவுள்ளது.
இந்த ஆசிய கிண்ண தொடரில் குழு A இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளும், குழு B இல் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராட்சியம், ஜப்பான் ஆகிய அணிகள் குழு B இலும் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 09 ஆம் திகதி ஜப்பான் அணியுடன் முதற் போட்டியிலும், 11 ஆம் திகதி ஐக்கிய அரபு இராட்சியம் அணியுடனும், 13 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனும் மோதவுள்ளன.
அணி விபரம்
Sri Lanka Squad for U19 Asia Cup
சினெத் ஜயவர்தன (தலைவர்), மல்ஷா தருபத் (உப தலைவர்), புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர களுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத், விஷேன் ஹலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புரபண்டார, டினுக தென்னகோன்