கர்ப்பிணிகளுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பல மாதங்களாக கல்சியம் மாத்திரைகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், விட்டமின்கள், கல்சியம், மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்கான வசதிகள் அனைவருக்கும் இல்லை எனவும் தாய்மார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுதவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க மகளிருக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசிக்கும் ஒரு வருட காலமாக தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply