மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (29.11) மாலை மூன்று மாவட்டங்களில் உள்ள 27 பிராந்திய செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை, அரநாயக்க, மாவனெல்ல, ருவன்வெல்ல, வரக்காபொல, கலிகமுவ, யட்டியந்தோட்டை மற்றும் புலத்கொஹுப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிதிவிகல, கஹவத்த, பல்மடுல்ல, அயகம மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதல் நிலை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலவான, இரத்தினபுரி, குருவிட்ட, அஹலியகொட, அலபட, மற்றும் கொடகவெல ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான இரண்டாம் நிலை அறிவிப்பையும் வெலிகேபொல கொலன்னா, பலாங்கொட இம்புல்பே மற்றும் ஓபநாயக்கா ஆகிய பிராந்திய செயலகப் பிரிவுகளுக்கான மூன்றாம் நிலை அல்லது சிவப்பு அறிவித்தலையும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்பகுதிகளில் வாழும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுத்துப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply