உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய ஆய்வறிக்கை!

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் அரசியல் தலையீடு இல்லை என இலங்கையின் 8 சதவீத மக்கள் மட்டுமே நம்புவதாக வெரிட்டி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டதாக இலங்கையின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், (53 வீதமானோர்) நம்புவதாக வெரிட்டி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் உள்நாட்டு அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்ட இலங்கைத் தீவிரவாதிகள் இருப்பதாகவும், உள்நாட்டு அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கைத் தீவிரவாதிகள் பின்னணியில் இருப்பதாகவும் இந்த ஆய்வில் கலந்துகொண்ட 30 வீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply