இலங்கை அணியிலிருந்து இருவர் விலகல்

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமை சேர்ந்த இருவர் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைய காலமாக இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற நெருக்கடி காரணமாகவே, இந்த பயிற்சியாளர்கள் பதவி விலகியுள்ளனர் என அறியப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் உடற் சிகிசிச்சை நிபுணர் கிறிஸ் கிளார்க் மற்றும் உடற் பயிற்சி நிபுணர் கிராண்ட் லௌடன் ஆகியோரே இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

எவ்வாறாயினும், இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகியுள்ளதாக கிரிக்கெட் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இலங்கை அணியின் பயிற்சி நடவடிக்கைகள், கிரிக்கட் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் அனைத்தையும் தரமிக்கதாக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கிரிக்கெட் வீரர்களிடமும் ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply