இலங்கையின் ஆவணக் காப்பகமும் நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகமும் இணைந்து டிஜிட்டல் மயமாக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைசதிட்டுள்ளது.
இந்த திட்டமானது 2024 முதல் 2028 வரை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படவுள்ளது.
தேசிய ஆவணக் காப்பகத்தின் சர்வதேச பாரம்பரிய ஒத்துழைப்புத் திட்ட மானியத்தின் கீழ்
நெதர்லாந்து தேசிய ஆவணக் காப்பகத்தில் கையளிக்கப்பட்ட ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிடப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த திட்டம் 31.10.2023 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் 05.12.2023 அன்று கொழும்பு தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் புத்தசாசன மற்றும் சமய கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மற்றும் நெதர்லாந்தின் கலாச்சார தூதர் திருமதி டெவி வான் டி வீர்ட்,
சர்வதேச கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் நெதர்லாந்தின் தூதர் போனி ஹோர்பாக் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.