சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்-பெண் மேற்பார்வையாளர் கைது

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் நேற்று(03.12) கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் மீது திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதையடுத்து சிறுவன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டார் . இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சிறுவன், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுப்பு காவலில் இருந்த சிறுவன் உடல் நல குறைபாட்டால் உயிரிழந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போதிலும், தாக்குதலுக்கு உள்ளான நிலையிலே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் 28 வயது மதிக்கத்தக்க பெண் மேற்பார்வையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply