சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் சிலர் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்துக்கமைய, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் சிறு குற்றங்களுக்கான தண்டனை பெற்ற 285 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுபவர்களில் 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் அடங்குவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சிறைக் கைதிளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினத்தில் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை கைதியொருவருக்கு போதுமான அளவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுத்தலுக்களுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply