2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய தலைமை சூத்திரதாரியை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தது.
இருப்பினும், நிர்வாகத்தில் உள்ள சிலர் இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டிருப்பதால் பொதுமக்களை தவறாக வழிநடத்த ஒரு மாற்று கதையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபய ராஜபக்ஷவுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு
குண்டுவெடிப்புகளை மேற்கொண்டது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்” என அவர் மேலும் தெரிவித்தார்.