கோப்28 மாநாட்டில் மஹேல?

டுபாயில் நடைபெற்று வரும் கலாநிலை நீதி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் கலந்து கொண்டிருந்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழு இந்த மாநாட்டில் கலந்து கொண்டது. இந்தக் குழுவில் தான் அங்கம் வகிக்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகளின் நிலைபேற்றுக்கான தூதுவர் என்ற அடைப்படையில் தான் கலந்து கொண்டதாக டெய்லி மிரர் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். “இலங்கை, நீதிக்கான அமைப்பின் வாக்குகளுக்கு ஆதரவை எதிர்பாத்துள்ள நிலையில் அதற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும்” மஹேல மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும் ஜனாதிபதி செயலகம் மஹேல ஜனாதிபதியின் குழுவில் இடம்பெற்றிருந்தார் எனவும், அதற்கு பிறிதொரு கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கூட்ட தொடரில் வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகர, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, அஜித் மன்னப்பெரும, மதுர விதானகே, ஜனாதிபதியின் காலநிலை மாற்ற ஆலோசகர் ருவான் விஜயவர்தன, ஜனாதிபதியின் சூழலியல் ஆலோசகர் கலாநிதி ஆனந்த மல்லவற்றான்றி உட்பட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version