ஒக்டோபர் மாதத்திற்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை முதல் பயனாளிக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கான 8,775 மில்லியன் ரூபாய் திறைசேரியில் இருந்து வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவின் ஊடாகவே இந்த விடயத்தை உறுதிபடுத்தியுள்ளார்.
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டு, தெரிவு செய்யப்பட்டோருக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நிதி வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.