ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04.12) இடம்பெற்றது. அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் நிறுவப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மற்றும் காலநிலை சவால்களுக்கு நிலையான தீர்வுகளை அமுல்படுத்த இலங்கை தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்தும் இங்கு ஜனாதிபதி விளக்கினார்.

காலநிலை மாற்றத்தை திறம்படக் கையாள்வதற்குத் தேவையான நிதி திரட்டும் முக்கியமான பிரச்சினை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், காலநிலை தொடர்பானத் திட்டங்களுக்கு நிதி மூலங்களை மேம்படுத்துவதில் தனியார் துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை நேரில் காண விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version