மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (07.12) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மரணமடைந்த மாணவனின் சடலம் அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொலையா என்பது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் குறித்த மதரஸா பாடசலையின் நிர்வாகியான மௌலவி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.