மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக, மலையக மார்க்கத்தில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ரயில் பாதையினை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையால் மலையக மார்க்கத்தில் தொடர்ச்சியான மண்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply