மின்சாரத்துறையைய தனியார் மயமாக்க இடமளியோம்!-சஜித்

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் சில மறுசீரமைப்புகள் இடம்பெற வேண்டுமானாலும் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் போன்ற துறைகளில் செயல்முறைகள் மற்றும் நன்மை பயக்கும் மாற்றங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு சாதகமாக அமைய வேண்டும் என்றும்,
காரணம்,மின்சாரத்துறையானது தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படப் போகும் மறுசீரமைப்புகள் எந்தவொரு பங்குதாரர்களுடனும் வெற்றிகரமான கலந்துரையாடல்கள் இன்றி ஒருதலைபட்சமாகவே மேற்கொள்ளப்படப் போகிறது என்றும், தங்களுக்கு சாதகமான நபர்களை பணியமர்த்துதல் மற்றும் பொதுப் பொறுப்பில் உள்ள ஒருவர், அப்பொறுப்பு தனக்களிக்கும் அதிகாரத்தால் தனிப்பட்ட இலாபத்தை அடையக்கூடிய சூழ்நிலையில் இத்தகையர்களை ஈடுபடுத்திக் கொண்டு, நட்டம் என்று கூறிக் கொண்டு இந்நாட்டின் தேசிய வளத்தை விற்க முயற்சிக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

1994 க்கு முன்னர் மின்சார சபை இலாபத்தில் இயங்கினாலும், இந்த அழிவு 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பமானதால், இதனைத் தொடர அனுமதிக்கப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரத்துறையை தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Social Share

Leave a Reply