உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் 13ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சார சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் எதிர்கட்சியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என மேலும் கூறினார்.
இதேவேளை, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.