சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் 2ம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் 2 நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.இதன்போது இலங்கையின் பிரேரணை தொடர்பில் பரிசீலிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2ம் தவணை கொடுப்பனவு கிடைக்கப்பெற உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 2ம் தவணையினை பெற்றுக்கொள்வதன் மூலம் வங்கரோத்து நிலையிலிருந்து விடுபட்ட நாடாக இலங்கையை பிரகடனப்படுத்த முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.