மண்சரிவு காரணமாக ஹட்டன் , பொகவந்தலாவ – பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக ஹட்டன் , பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன்டிலரி பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக குறித்த பகுதிகளுக்கான போக்குவரத்தினை மேற்கொள்வதற்கு மாற்று வழிகள் இன்மையால் சாரதிகள் மற்றும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்டு பல மணி நேரங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை மண்மேட்டினை அகற்றும் பணிகள் உரிய அதிகாரிகளால் முன்னெடுக்கப்படவில்லை என பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.