அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு..!

அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையினை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச சேவையில் பணிப்புரியும் வைத்திய நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல மற்றும் கருணாரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட குழாம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Social Share

Leave a Reply