ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று(15.12) கொழும்பில் நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை முன் மொழிந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதனை வழி மொழிந்தார்.
இன்று நண்பகல் சுகததாச உள்ளக அரங்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாடு அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளரும் கட்சி ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நடைபெற்று வருகிறது.