தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் சற்று குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் பின்னணியில் இவ்வாறானதொரு நிலை பதிவாகியுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகிறது.
நாட்டின் மரக்கறித் தேவைகளில் எழுபது வீதமானவை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தினால் பூர்த்தி செய்யப்படும் நிலையில், இவ்வாறு மரக்கறிகள் விலைகள் குறைந்த போதிலும் அதனால் நுகர்வோருக்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனையாளர்களின் விற்பனைக்கு மொத்த வியாபாரிகள் பொறுப்பேற்க முடியாததே இதற்குக் காரணம் என அவர்கள் தம்புள்ளை பொருளாதார மையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.