பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் இராண்டாயிரத்து 271 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 33 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 212 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.