பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு..!

பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவில் பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அதனை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply