இன்றைய வானிலை!

தற்போதைய மழையுடனான காலநிலை இன்று (20.12) முதல் எதிர்வரும் நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply