இந்தியாவுடன் தென்னாப்பிரிக்காவுக்கு அபார வெற்றி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று (19.12) க்கெபெர்ஹாவில் 2 ஆவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னப்பிரிக்கா அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமனாக்கியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 46.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. இதில் சாய் சுதர்ஷன் 62(83) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 56(64) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நன்றே பேர்கர் 3 விக்கெட்களையும், பெயுறான் ஹென்றிக்ஸ், கேஷவ் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், லிசாட் வில்லியம்ஸ், எய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா ஒவ்வ்ரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 42.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்றது. இதில் டொனி டி சொர்சி ஆட்டமிழக்காமல் 119(122) ஓட்டங்களையும், ரீசா ஹென்றிக்ஸ் 52(81) ஓட்டங்களையும், ரசி வன் டெர் டுசென் 36(51) ஓட்டங்களையும் பெற்றனர். ரீசா ஹென்றிக்ஸ், டொனி டி சொர்சி ஆகியோர் 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். டொனி டி சொர்சி, ரசி வன் டெர் டுசென் ஆகியோர் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். டொனி டி சொர்சி தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள். ரிங்கு சிங் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 1 ஆவது விக்கெட்டினை கைப்பற்றிக்கொண்டார்.

இந்த போட்டியின் நாயகனாக டொனி டி சொர்சி தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply