கைது செய்யப்பட்ட இந்திய மீனர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு..!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 திகதி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நீதவான் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply