நூற்றுக்கணக்கான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதன்படி, 200 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தங்கள் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா மீதான படையெடுப்பு மற்றும் ஹமாஸை ஒழிக்கும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 700 பலஸ்தீனிய போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.