மத்திய நைஜீரியா நாட்டின் பிளாட்டு (Plateau) மாநிலத்தின் போக்கோஸ் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த மோதல் பாரதூரமான நிலையை எட்டியதில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
இந்த மோதல் காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறான அராஜகமான, நியாயமற்ற மோதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.