மேலும் 8 மில்லியன் முட்டைகள் சதொச கடைகளுக்கு..!

மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சதொச கடைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் முட்டைகளுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று முதல் சதொச கடைகளில் வாடிக்கையாளர்கள் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் முட்டைக்கு அதிக கேள்வி ஏற்பட்ட நிலையில் தற்போது பற்றாக்குறை நிலவுவதால் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாக அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply